Meter News
New's
New's 02
முச்சக்கரவண்டி கட்டண விழிப்புணர்வு!
பயணிகளுக்கும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கும் அன்பார்ந்த சன்சக்தி/லிங்க்லங்கா நிறுவனங்களின் வணக்கங்கள்!
01.01.2018 முதல் இலங்கையில் மோட்டார் முச்சக்கரவண்டிகளுக்கான ஒழுங்கு விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இது இலங்கை முழுவதும்கொழும்பில் இருக்கின்ற பயணிகள் குழுமமும், வாகன ஓட்டுனர் குழுமமும், லிங்க் லங்கா நிறுவனத்துடன் இணைந்து இப்போது நடைமுறையில் இருக்கும் கட்டணங்களை சரியானமுறையில் தீர்மானிக்கின்றார்கள்.இவர்கள் தங்கள் கணிப்பில் ஒரு பயணியை ஒரு இடத்தில் இருந்து ஏற்றிச்சென்று அந்த பயணியை அவர் குறிப்பிடும் இடத்தில் இறக்கிவிட்ட பின்னர் ஏற்றிய இடத்திட்ற்கு பயணிகள் இல்லாமல் வருவதையே அடிப்படையாக கொண்டதாகும். இவர்கள் மேல்மாகாணத்துக்கு ஒரு கூடுதலான கட்டணத்தையும் மற்றைய மாகாணங்களுக்கு குறைந்த கட்டணத்தையும் தீர்மானிக்கின்றார்கள்.
யாழ்மாவட்டத்தில்,
முச்சக்கரவண்டிசங்கங்களினூடானகலந்துரையாடலின்பின்னர், யாழ்மாவட்டஅரசஅதிபரின்உத்தரவின்படி 2018ம்ஆண்டுமேல்மாகாணத்தைவிடஅதிகமானகட்டணம்தீர்மானிக்கப்பட்டது. அதைநாங்கள்வடமாகாணம்முழுவதும்லிங்கலங்காநிறுவனத்தின்சம்மதத்துடன்நடைமுறைப்படுத்தினோம். அதுபோன்றஒருமுடிவுமுன்னெடுப்பார்களென்று, நாங்கள்சன்சக்தி/லிங்க்லங்காநிறுவனம்சென்ற 3 வருடமாககாத்திருந்துபலன்எதுவும்கிடைக்கப்பெறவில்லை, எங்களின்சன்சக்தியின்முயற்சியின்பிரகாரம்மேல்மாகாணகட்டணத்தைவடமாகாணத்தில்நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
பலரின் வேண்டுகோளுக்கமைய, பயணிகளின் போக்குவரத்தை சுமூகமாக்கி அவர்களின் முச்சக்கரவண்டி பாவனையை அதிகரிக்கும் நோக்குடன் சன்சக்தி/லிங்க் லங்கா நிறுவனத்தினரால் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
எங்களின் இந்த முயற்சி வெற்றி பெற்று ஒரு நேர்த்தியான நடைமுறைக்கு முச்சக்கரவண்டி பாவனை வர அனைவரின் ஒத்துழைப்பையும் நல்குமாறு வேண்டுகின்றோம்.
எங்களால் பயணக்கட்டணமானி வடக்கில் 1900 முச்சக்கரவண்டிகளுக்கு பொருத்தி .கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவற்றை இயங்கு நிலைக்கு கொண்டுவருவதற்கு சன்சக்தி/லிங்க் லங்கா நிறுவனத்தினரால் முடிந்த பங்களிப்பை வழங்குகின்றோம்.
கட்டணமானி பொருத்தாத முச்சக்கரவண்டி ஓட்டுநர்களும் அதில் பயணிப்பவர்களுக்கு வடக்கில் ஒரு மாற்றம் அரச அதிபர்களாளோ, ஆளுனர்களாளோ,முதலமைச்சராளோ ஏற்படுத்தும்வரை, மேல்மாகாண கட்டணத்தின் அடிப்படையில் பயணிப்பதன் மூலமாக பரவலாக முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு அதிக வருமானமும், பயணிகளுக்கு நேர்த்தியான தொந்தரவுகள் இல்லாத சுமூகமான பயணத்தையும் நடைமுறை படுத்த முடியும்.
எங்கள் பொருளாதாரத்தின் ஒரு தூணாக இருக்கின்ற போக்குவரத்தை சீர் செய்வதன் மூலமாக நாங்கள் எல்லோரும் எங்கள் வளர்ச்சிக்கும் எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் ஒரு பெரும் பங்களிப்பை வழங்க முடியும் என்ற முறையில் இந்த முச்சக்கரவண்டி கட்டண விழிப்புணர்வை முன்னெடுக்குகின்றோம்.
விழிப்புணர்வை ஊட்டுகின்றோம் – அதை நீங்கள் நடைமுறைப்படுத்துவதன் மூலமாக அனைவரும் நன்மையடைவோம்!
New's 01
யாழ்ப்பாணம், 7.11.2022
முச்சக்கரவண்டிப்பயணங்களை ஒழுங்கமைத்தல்!
சன்சக்தி லிங்க் லங்கா நிறுவனத்தினரால் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் பாவனையிலிருக்கும் முச்சக்கரவண்டிகளின் விபரங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளோம். உங்கள் முச்சக்கரவண்டிகளின் விபரங்களும் அந்த பட்டியலில் பதிவிடப்பட வேண்டுமானால் உங்கள் கட்டண மீட்டர்களை வருகின்ற சனிக்கிழமை 19.11.2022.ம் திகதிக்கு முன்கூட்டியே இயங்கு நிலைக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முச்சக்கர வண்டி ஓட்டுநரின் வருமானத்தை பெருக்கவும் மக்களின் சுமூகமான போக்குவரத்தை உருவாக்குவதற்கும் உங்கள் ஒத்துழைப்பை நாடுகின்றோம்.
குறிப்பு: உங்கள் ஆட்டோ சங்க தலைவர் அல்லது செயலாளர் எங்களுடன் தயவு செய்து தொடர்பு கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்ளுகின்றோம்.
தொலைபேசி இலக்கம்-0778473095