Who We Are?

எங்களை பற்றி

எமது நிறுவனம் 2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

நிறுவனத்தின் நோக்கம் :- நாம் வட மாகாணத்தின் தன்னிறைவான பொருளாதாரத்திற்குத் தேவையான பல்வேறு ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களைப் பகுப்பாய்வு மேற்கொண்டு, தேவை ஏற்படின் அவை தொடர்பான மேலதிக ஆராச்சிகள்/பரிசோதனைகள் மேற்கொண்டு, அவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சியாளர்கட்கு உறுதுணையாக நிற்கிறோம். அத்துடன் எங்களால் முடிந்தளவு செயற்றிட்டங்களை வெற்றிகரமாகச் செயற்படுத்தி வருகின்றோம்.

2016 ஆம் ஆண்டு முச்சக்கரவண்டி ஓட்டுனர்களிற்கும் பயணிகளிற்கும் இடையில் நிலவிய கட்டணம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இலங்கையில் முதல் தரமான முச்சக்கரவண்டி மீற்றர் உற்பத்தியாளராகிய லிங்லங்கா நிறுவனத்துடன் வட மாகாணத்தின் ஏக விநியோகஸ்தராக ஒப்பந்தம் செய்து கொண்டதுடன், மேலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்காகப் பல்வேறு சட்ட சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். அத்துடன் முச்சக்கரவண்டி கட்டணமானி பொருத்துதல் மற்றும் அவற்றை பராமரித்தல்தொடர்பான பணிகளையும் பொறுப்பெடுத்துச் செய்துவருகின்றோம்.

அதே நேரத்தில் மிக உயர்ந்த தரத்திலுள்ள பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்வதும், அவற்றை வாடிக்கையாளர்களுக்குப் பொருத்தி கொடுப்பதும், பொருத்திய கருவிகளிற்கு தேவையான தொடர் பராமரிப்பு சேவையை சரியான முறையில் இன்றுவரையும் வழங்கி வருகின்றோம்.

வட மாகாணத்தின் கடல் சார்ந்த மக்களினதும், கடலுணவு பயன்பாட்டாளர்களினதும், அதனுடன் தொடர்புடைய தொழிலாளர்களினதும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் எமது நிறுவனத்தினால் தற்போது பொதுநல மீன் வளர்ப்பு அபிவிருத்தி திட்டம் எனும் பாரிய அளவிலான செயற்றிட்டமொன்று தற்சமயம் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அதற்கான அனுமதிகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.

2018 ஆம் ஆண்டு தொடக்கம் சூரியசக்தி மின்படலக் கருவிகள் பொருத்துதல் (Solar panel installation ), பாதுகாப்பு கருவிகள் பொருத்துதல் (CCTV Camera installation), வரவு பதிவேட்டு கருவிகள் (Biometric attendance system), குளிரூட்டி பொருத்துதல் (AC installation), உள்ளக தொடர்பாடல் வலையமைப்பு கருவிகள் பொருத்துதல் (intercom system), இணைய மென் பொருள் மேம்பாடு (Cloud based system software development)/ மற்றும் உள்ளக வலையமைப்பு நிர்வகித்தல் (Network administration) போன்ற நவீன தொழில்நுட்ப தொழில் முயற்சிகளையும் ஆரம்பித்துள்ளோம்.

எமது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு செ.கனகராஜா ரமணாகரன் (C.E.O) B.D.P.M ஜேர்மனி)செயற்பட்டுவருகிறார். இவர் இலங்கை, இந்தியா, ஜேர்மனி போன்ற நாடுகளில் (Software developmen) மென்பொருள் மேம்பாட்டு நிறுவனங்களில் மென்பொருள் உற்பத்தி தலைமை நிர்வாக அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.

About us

Our Sunshakti traders private Ltd. company was successfully started in the year 2015.

Vision of our company:- We will analyze the various creative projects required for the self-sustainable economy of the people of the Northern Province of Sri Lanka and carry out further investigations/examinations related to them if necessary and stand in support of those who try to implement them. Besides, we are too successfully executing such projects as much as we can.

In 2016 we signed an agreement with Linklanka, the first quality tricycle meter manufacturer in Sri Lanka as the sole distributor of the Northern Province to resolve the fare related issues between tricycle drivers and passengers. We have also taken various legal reform measures to implement it. We are also responsible for the installation and maintenance of tricycle fare meters

At the same time, we continue to sell the highest quality products at reasonable prices, fit them to our customers, and provide the necessary continuous maintenance services for the fitted equipment in a proper manner till date.

With the scope of improving the economy of the sea-dependent people of the Northern Province, seafood users and related workers, a large-scale project called Welfare Aquaculture Development Scheme (WADS) is currently being engaged by our company.

From 2018 we have started modern technology business ventures like Solar panel installation, Security equipment installation (CCTV Camera installation), Biometric attendance system, AC installation, Intercom system, Cloud based system software development/ and internal network administration.

The Chief Executive Director of our company is Mr. S. Kanakaraja Ramanakaran (C.E.O) B.D.P.M Germany). He has been working as a software development chief executive officer in software development companies in countries like Sri Lanka, India and Germany.

MR.S. KANAGARAJAH RAMANAKARAN

WIRTSCHAFTSINFORMATIKER(BDPM)-GERMANY
MANAGING DIRECTOR
skramanakaran@sunsakthy.com

MR ANNARASA KIRISHANTHAN

MANAGER

kirishanthan@sunsakthy.com
Scroll to Top