Meter Fare

முச்சக்கரவண்டி கட்டண விழிப்புணர்வு!

பயணிகளிற்கும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களிற்கும் சன்சக்தி,லிங்லங்கா நிறுவனங்களின் அன்பார்ந்த வணக்கங்கள்!

01.01.2018 முதல் இலங்கையில் முச்சக்கர வண்டிகளிற்கான ஒழுங்கு விதி முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இது இலங்கை முழுவதும் அதாவது கொழும்பில் இருக்கின்ற பயணிகள் குழுமமும், வாகன ஓட்டுனர் குழுமமும், லிங்லங்கா நிறுவனத்துடன் இணைந்து இப்போது நடைமுறையில் இருக்கும் கட்டணங்களை சரியான முறையில் தீர்மானிக்கின்றார்கள். இவர்கள் தங்கள் கணிப்பில் ஒரு பயணியை ஒரு இடத்தில் இருந்து ஏற்றிச்சென்று அந்த பயணியை அவர் குறிப்பிடும் இடத்தில் இறக்கிவிட்ட பின்னர் ஏற்றிய இடத்திற்கு பயணிகள் இல்லாமல் வருவதை அடிப்படையாக கொண்டதாகும். இவர்கள் மேல் மாகாணத்திற்கு கூடுதலான கட்டணத்தையும் மற்றைய மாகாணங்களிற்கு குறைந்த கட்டணத்தையும் தீர்மானிக்கின்றார்கள்.

யாழ் மாவட்டத்தில்,

முச்சக்கரவண்டி சங்கங்களினூடான கலந்துரையாடலின் பின்னர் யாழ் மாவட்ட அரச அதிபரின் உத்தரவின் பிரகாரம் 2018 ஆம் ஆண்டு மேல் மாகாணத்தை விட அதிகமான கட்டணம் தீர்மானிக்கப்பட்டது. அதனை நாங்கள் வட மாகாணம் முழுவதும் லிங்லங்கா நிறுவனத்தின் சம்மதத்துடன் நடைமுறைப்படுத்தினோம்.

பலரின் வேண்டுகோளிற்கமைய பயணிகளின் போக்குவரத்தை சுமூகமாக்கி அவர்களின் முச்சக்கரவண்டி பாவனையை அதிகரிக்கும் நோக்குடன் சன்சக்தி,லிங்லங்கா நிறுவனத்தினரால் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. எங்களின் இந்த முயற்சி வெற்றி பெற்று நேர்த்தியான நடைமுறைக்கு முச்சக்கரவண்டி பாவனை வருவதற்கு அனைவரின் ஒத்துழைப்பையும் நல்குமாறு வேண்டுகின்றோம்.

எங்களால் பயணக்கட்டணமானி வடக்கில் 1900 முச்சக்கரவண்டிகளுக்கு பொருத்தி .கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவற்றை இயங்கு நிலைக்கு கொண்டுவருவதற்கு சன்சக்தி,லிங்லங்கா நிறுவனத்தினரால் முடிந்த பங்களிப்பை வழங்குகின்றோம்.

கட்டணமானி பொருத்தாத முச்சக்கரவண்டி ஓட்டுனர்களிற்கும் அதில் பயணிப்பவர்களிற்கும் வடக்கில் ஒரு மாற்றத்தினை அரச அதிபர்களாலோ, ஆளுநர்களாலோ,முதலமைச்சராலோ ஏற்படுத்தும்வரை மேல் மாகாண கட்டணத்தின் அடிப்படையில் பயணிப்பதன் மூலமாக பரவலாக முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு அதிக வருமானமும், பயணிகளிற்கு நேர்த்தியான சுமூகமான பயணத்தையும் நடைமுறைப்படுத்த முடியும். எங்கள் பொருளாதாரத்தின் ஒரு தூணாக இருக்கின்ற போக்குவரத்தை சீர் செய்வதன் மூலமாக நாங்கள் எல்லோரும் எங்கள் வளர்ச்சிக்கும் எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் ஒரு பெரும் பங்களிப்பை வழங்க முடியும் என்ற முறையில் இந்த முச்சக்கரவண்டி கட்டண விழிப்புணர்வை முன்னெடுக்கின்றோம்.

விழிப்புணர்வை ஊட்டுகின்றோம் – அதனை நீங்கள் நடைமுறைப்படுத்துவதன் மூலமாக அனைவரும் நன்மையடைவோம்!

Scroll to Top