நாங்கள் வடக்கில் சில அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தி மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்தும் நோக்குடன் பல திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்
வடக்கு பிரமாண்டமான மீன் வளர்ப்பு திட்டம் (NMFFP)
Northern Mega Fish Farming Project(NMFFP)
இலங்கையில் 60சத வீதமானவர்கள் மூன்று நேரம் உணவு சரியாக உண்பதற்கு வழியில்லாமல் இருப்பதை அறிந்திருப்பீர்கள். இந்த பிரச்னையை ஒழிப்பதற்கு ஒரு சிறு பங்காற்றும் முகமாக.
வடக்கு பிரமாண்டமான மீன் வளர்ப்பு திட்டம் (NMFFP)
Northern Mega Fish Farming Project(NMFFP)
ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.
நோக்கம்: 4 வருடத்துக்குள் 3-5 மடங்கு சிறு கடல் வாழ் உயிர் இனங்களை அறுவடை செய்வதே ஆகும்.
2015/2016ம் ஆண்டுகளில் அரச அதிபர் திரு வேதநாயகமும் மாநகரசபை ஆணையாளர் திரு வாகீசன் அவர்களும் வடக்கில் மீண்டும் முச்சக்கரவண்டி கட்டனமாணிகளை நடைமுறைக்கு கொண்டு வர விரும்புவதாகவும் ஆனால் வடமாகாணத்தில் எந்த ஒரு முச்சக்கரவண்டி கட்டனமாணி நிறுவனமும் செயற்படவில்லை என்றும் ஆதங்க பட்டுக்கொண்டிருப்பதை கேள்வியுற்றோம்.
2013ஆம் ஆண்டு முச்சக்கரவண்டி கட்டணமானி பொருத்தியவர்களோ அல்லது வேறு எவரும் இந்த பொறுப்பை ஏற்க முன்வராத நிலையில்தான் நாங்கள் பொறுப்பேற்று இப்பணியை மேற்கொண்டோம்.
எங்கள் பொருளாதாரத்தின் ஒரு தூணாக இருக்கின்ற போக்குவரத்தை சீர் செய்வதன் மூலமாக எல்லோரின் வளர்ச்சிக்கும் எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் ஒரு பெரும் பங்களிப்பை வழங்க முடியும் என்று பல பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் 2015/2016ம் ஆண்டு முதல் எல்லோராலும் கைவிடப்பட்ட வாகனங்களுக்கு கட்டணமானி பொருத்தும் திட்டத்தை மீண்டும் கையில் எடுத்து வடக்கில் அமுலாக்க பல பெரும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
வடமாகாண பயணிகள் நலன்புரிச்சங்க அங்குராட்;ப்ண ஆலோசனை கூட்டம் யாழ்ப்;பாணம் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் காரியாலய மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் அமைப்பாளர் திரு.எஸ்.கே.ரமணாகரன் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.
வடமாகாணத்தில் சகல மாவட்டங்களிலுமுள்ள பலவித பாதைகளில் பலவிதமான வாகனங்களிலும் பயணிக்கின்ற மக்களின் பயணங்களிலேற்படும் சிக்கல்கள், சிரமங்களை நாம் அனைவரும் ஒன்றுகூடி தொகுத்து ஆலோசித்து அவைகளை சீராக்கி;;, தீர்க்கும் வழிவகைகளை உரிய திணைக்களங்கள் அமைப்புக்களுடன் இணைந்து தீர்வுகள் காணும் நோக்கில் இவ்வமைப்பை கொண்டுவர முயற்சிப்பதே நோக்கமாகும்
உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் நோக்குடன் எங்களால் 2022 தொடங்கப்பட்ட ஒரு வடகணினியம் என்ற ஒரு கூட்டமைப்பு
Chamber for integrated development ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான கூட்டமைப்பு என்ற பெயரில் பதியப்பட்டு கொண்டிருக்கின்றது. 2023 தை மாதமளவில் இந்த வேலைக்கான பதிவுத்திட்டம் பூர்த்தியாகிவிடும்.மாசி பங்குனி மாதமளவில் வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகும்.
யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழில்துறை மன்றம் (Chamber of commerce and industries Yarlpanam), வடக்கின் மிக பெரிய ஒருங்கிணைப்பு நிறுவனம்.
சில இயக்குனர்களின் தவறான செயற்பாடுகளுக்கு எதிராக, எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று நம்பிக்கை இழந்து நின்றபோது எமது சொந்த பணத்தை செலவுசெய்து இவர்களை எதிர்த்து நின்றுகொண்டிருக்கின்றோம். இந்த நிர்வாகத்துக்கு எதிராக முதலில் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்திலும் அதன் பின்னர் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளோம். இவர்களை தேர்தல் நடத்த முடியாதபடி இடைக்கால தடையுத்தரவு பெற்று இவர்களின் செயற்பாட்டை முடக்கி வைத்துள்ளோம்.
இப்போது பெரும்பாலான பிரச்சினைகள் முடிவுக்கு. வந்துள்ளதால் எங்கள் இடைக்கால தடை உத்தரவை நீக்கி ஐனநாயக முறையில் தேர்தல் நடத்துவதற்கு எங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கி கொண்டு இருக்கின்றோம்.