Meter History
Meter History
2016 ஆம் ஆண்டு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு நாகலிங்கம் வேதநாயகம் அவர்களும் யாழ் மாநகரசபை ஆணையாளர் திரு.வாகீசன் அவர்களும் மீற்றர் பொருத்துவது தொடர்பாக முச்சக்கரவண்டி சங்கத்தினரை அழைத்து சில கலந்துரையாடல்களை நடத்துவதாகவும் அத்துடன் முச்சக்கரவண்டி சங்கத்தினர்கள் யாழ்ப்பாணத்தில் சிறந்த ஒரு மீற்றர் நிறுவனம் இல்லையென்று கூறுவதாகவும் கேள்வியுற்றோம்.
நாங்கள் வட மாகாணத்தின் பொருளாதாரத்தினை உயர்த்தும் நோக்கில் பணியாற்ற வந்தமையினால் பொருளாதாரத்தின் ஒரு தூணாக இருக்கின்ற போக்குவரத்தை சீர் செய்வதன் மூலமாக எமது நாட்டினதும் எங்களதும் வளர்ச்சிக்குமாக ஒரு பெரும் பங்களிப்பை வழங்க முடியும் என்ற முறையில் இந்த முச்சக்கரவண்டி கட்டணமானி பொருத்தும் பணியை பொறுப்பில் எடுத்தோம்.
2016 ஆம் ஆண்டு அவர்களின் வேண்டுகோளிற்கமைய நாங்கள் விற்பனை செய்யும் அனைத்து கட்டணமானிகளிற்கும் 1 வருட கால உத்தரவாதமும், 5 வருட கால பராமரிப்பு உத்தரவாதமும் வழங்கியதை தொடர்ந்து மீற்றர்கள் 2016, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் பொருத்தப்பட்டு அதற்கான சட்டம் இயற்ற படாமையினாலும் பாவனைக்கு வராமையினாலும் அவர்களின் முயற்சி தோல்வியுற்றது. ஆனால் 22/09/2017 இல் முச்சக்கர வண்டிகளின் மீற்றர் ஒழுங்கு விதிகள் இயற்ற பட்டும், மீண்டும் அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டும் 01/01/2018 இல் அச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இருந்த போதிலும் வைரஸ் தொற்று(கோறோனா) காரணமாக பிற்போடப்பட்டு, அவை வட மாகாணத்தில் 15/06/2022 இல் நடைமுறைக்கு வந்தது. போக்குவரத்து அமைச்சரின் உத்தரவின் பிரகாரம் 26/06/2022 தொடக்கம் முச்சக்கரவண்டி கட்டணமானி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.
வைரஸ் தொற்றுக்கு பின்னர் எங்கள் நிறுவனம் 2023 வைகாசி வரை ஒரேஒரு புதிய கட்டணமானியை விற்பனை செய்தது. எனினும் ஓட்டுனர்களிற்காகவும் மற்றும் அரசாங்க அதிபருக்கும் ஆணையாளருக்கும் கொடுத்த வாக்குறுதிக்கமையவும் கட்டணமானிக்கான பராமரிப்பை பல மில்லியன் இழப்புக்களுக்கு மத்தியிலும் நடைமுறை படுத்தியுள்ளோம்.
2023 இல் அரசாங்க அதிபராக பதவி வகித்த திரு அம்பலவாணர் சிவபாதசுந்தரன் அவர்களினது தளராத முயற்சிக்கு எமது நிறுவனத்தால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு, 1300 முச்சக்கர வண்டி கட்டணமானிகள் புதிதாக பொருத்தப்பட்டும் பழைய கட்டணமானிகள் இயங்கு நிலைக்கும் கொண்டுவரப்பட்டது.
எனினும் இன்று வரை எமது பணியை தொடர்ந்தவாறே உள்ளோம்.
சன்சக்தி ரேடர்ஸ் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தினூடாக 2022 ஆம் ஆண்டு வலம்புரி பத்திரிகையின் இறுதி பக்கத்தில் முச்சக்கர வண்டிகளின் கட்டணமானி தொடர்பாக விழிப்புணர்வு வெளியிடப்பட்டது. அந்த பத்திரிகை விளம்பரத்தை நாம் இங்கு இணைக்கின்றோம்.
